இம்மாதம் 20 ஆம் திகதி நாட்டில் சகல அரச பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பு இருந்தபோதிலும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை அடுத்து நாட்டின் தற்போதைய நிலைமை ஆரோக்கியமானதாக இல்லாத காரணத்தினால் குறிக்க திகதியில் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாட்டின் தற்போதுள்ள நிலைமைகளில் அரச பாடசாலைகள் எப்போது ஆரம்பிக்கப்படும் என்ற சரியான திகதியை அறிவிக்க முடியாதுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமைகள் தொடர்ந்தும் நீடிக்கின்ற காரணத்தினால் இப்போதைக்கு பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாதுள்ளது என்றார்.