ஒன்றிணைந்த சேவைகள் 7க்கான உள்ளீர்ப்பிற்கு ஒரே பரீட்சையை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண மற்றுமு் மாகாண பரிபால அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர் சரிபால ஹெட்டியாரச்சி இது தொடர்பாக குறிப்பிடுகையில், இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை, திட்டமிடலாளர் சேவை, பொறியியல் சேவை உட்பட 7 பிரதான நாடளாவிய சேவைகளுக்கான உள்ளீர்ப்பிற்கு ஒரே பரீட்சையைப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கான பிரேரணை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த சேவைகளுக்குத் தனித்தனியாக பரீட்சைகள் நடாத்தப்படுவதனால் காலமும் பணமும் வீணாகின்றது. எனவே, புதிய முறையின் மூலம் அதிக நன்மை கிடைக்கும் என செயலாளர் நம்பிக்கை தெரிவித்தார்.
புதிய பரீட்சை முறையில் நுண்ணறிவும், பொது அறிவும் ஆகிய இரு வினாத்தாள்களும் கொண்ட பொதுப் பரீட்சை நடைபெறும். பின்னர் தகுதியானவர்களைத் தெரிவுசெய்து குறித்த சேவைக்குத் தேவையான பரீட்சை நடைபெறும் வகையில் இது திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.