மத்திய மாகாணத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்காக, ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு, மாத்தளை நாலந்த சுதர்ஷி கனிஷ்ட வித்தியாலயத்தில், நேற்று (9) முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறுத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், மேற்படி யோசனைத் தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்தை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மத்திய மாகாணத்தில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை, தனிப்பட்ட முறையில் ஆராய்ந்துப் பார்க்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலே, அமைச்சர் அகிலவிராஜ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பெருந்தொகையான ஆசிரியர்களை நியமித்தாலும்கூட, மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்றுத் தெரிவித்த அவர், அமைச்சரவைப் பத்திரத்தைத் தாக்கல் செய்து, ஆசிரியர் இடைவெளிகளைப் பூர்த்திசெய்வதுடன், அவர்களுக்கு முறையான கொடுப்பனவை வழங்குவதே, இதற்குச் சிறந்தத் தீர்வென்றும் தெரிவித்தார்.
மாகாணத்தில் எந்தெந்தக் கல்வி வலயங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது என்பதை ஆராய்ந்து அறிக்கைச் சமர்ப்பிக்குமாறு, கல்வி அமைச்சின் செயலாளருக்குப் பணித்துள்ளதாகவும் அந்த ஆறிக்கையின் பிரகாரம் ஆசியர் பற்றாக்குறை பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், மீண்டும் சேவையில் இணைந்துகொள்வதற்கு அதிக விருப்பத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.