தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி கலாநிதி ஜயந்தி குணசேகர நானள முதல் ஓய்வு பெறுகிறார்.
பிரியாவிடை வைபவம் நேற்று தேசிய கல்வி நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.சி்த்திரானந்த, கல்விச் சேவைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள், தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம்கள், தேசிய கல்வி ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் கல்வித் துறை சார்ந்த பலர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
42 வருடங்கள் அரச துறையில் பணியாற்றி ஓய்வு பெறும் கலாநிதி திருமதி ஜயந்தி குணசேகர தனது அரச சேவையை ஆசிரியராக ஆரம்பித்து தேசிய கல்வி ஆணைக்குழுவின் மூன்று வருடங்கள் உட்பட தேசிய கல்வி நிறுவகத்தில் 33 வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.
தேசிய கல்வி நிறுவகத்தில் உதவி செயற்றிட்ட அதிகாரியாக தனது பணியை ஆரம்பித்து தேசிய கல்வி நிறுவகத்தின் உயர் பதவியான பணிப்பாளர் நாயகம் வரை உயர்ந்து தொடர்ச்சியாக 4 வருடங்கள் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய அவர், மார்ச் 15 முதல் ஓய்வு பெறுகிறார்.
பல்வேறு திட்டங்களில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாலும் கடந்த அரசாங்கம் அறிவித்திருந்த 13 வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வித் திட்டத்தின் கலைத்திட்ட விருத்தி மற்றும் வடிவமைப்பில் தலைமைத்துவம் வழங்கியமையை பெருமையாகக் கருதுவதாக அவர் தனது பிரியாவிடை உரையின் போது தெரிவித்தார்.
ஓய்வு காலம் மகிழ்சியாகவும் சிறப்பாகவும் அமைய நாம் வாழ்த்துகிறோம்.
I also had an opportunity to work under the director general of n.i.e mrs.jayanthi madam.she was an energetic powerful lady I met in my professional life period eng s.sakthithasan former project officer dept.of technical education.