ஓய்வூதியத் திணைக்கள ஊழியர்கள் வீடுகளிலிருந்தே தமது கடமைகளை மேற்கொள்வதற்கான புதிய செயற்பாட்டு இணைய தள கட்டமைப்பு ஆரம்பிக்கபட்டுள்ளது.
இதன் மூலம் 500இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பல்வேறு நிறுவனங்களினால் கட்டமைப்புக்குள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுதொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளில் ஓய்வூதிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர.
இதுகுறித்து ஓய்வூதிய திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
வீடுகளில் இருந்தே கடமைகளை மேற்கொள்ளும் ஓய்வூதிய திணைக்களத்தின் புதிய செயற்பாட்டு கட்டமைப்பை வீட்டிலிருந்து இணையதளத்தில் சேர்க்கபட்டமை தொடர்பான ஓய்வூதிய சுற்றறிக்கை இலக்கம் 05 / 2020
உலகளாவிய கொரோனா வைரசு தொற்று நிலைமையின் காரணமாக வீட்டிலிருந்தே கடமைகளை மேற்கொள்ளும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் ஓய்வூதிய திணைக்கள ஊழியர்களின் கடமைகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள புதிய செயற்பாட்டுக் கட்மைப்பை சமீபத்தில் நடைமுறைப்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்க நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபை உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் திரு ஹெட்டியாராச்சி , தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர் நிலையத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவர் திரு வசந்த தேசப்பிரிய , ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி டயஸ், ஓய்வூதிய மேலதிக பணிப்பாளர் நாயகம் திரு.கே.ஆர்.பத்மபிரிய , ஓய்வூதிய திணைக்களத்தின் சபை அதிகாரிகள் , இலங்கை இராணுவத்தின் ஓய்வூதிய பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் meet.gov.lk ஊடாக வீடுகளில் இருந்தவாரே கலந்து கொண்டனர்.
இதற்கமைவாக முதலாவது விண்ணப்பமாக இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியின் விண்ணப்பமொன்று கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டது.
ஓய்வூதிய திணைக்களத்தின் சுற்றறிக்கை இலக்கம் 05ஃ2020 மூலம் இதற்கு தேவையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது இதற்கான வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் 500இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பல்வேறு நிறுவனங்களினால் கட்டமைப்புக்குள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஓய்வூதிய திணைக்களத்தின் பணியாளர் சபையினர் வீடுகளிலிருந்து இந்த விண்ணப்பக்கங்களை பரிசோதிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த கனணிமய வேலைத்திட்டம் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர் நிலையத்தின் தலைமையில் சஞ்சே லங்கா தனியார் நிறுவனத்தின் தொழில் நுட்ப பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது.