கடந்த 12 மாத காலப்பகுதியில் 2,21,000 தொழில் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக அரச புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் காலாண்டு பகுதியில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 33.5 சதவீதத்தில் இருந்து 34.9 சதவீதமாக அதிகரித்தது. இதே போன்று ஆண்களின் எண்ணிக்கை 73.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆண்களில் தொழில் அற்றோரின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் 2 சதவீதமாக அதிகரித்தது.
இதே போன்று பெண்கள் தொழிலற்றோர் எண்ணிக்கை 7.4 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக குறைந்துள்ளது. சேவை தொழிற்துறை 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 12 மாத காலப்பகுதிகளில் தொழில் வாய்ப்புகள் 2,52,502 ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விவசாய தொழில் துறையில் ஈடுபட்டோர் எண்ணிக்கை விழச்சி கண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டை அண்டிய முதல் காலாண்டுப் பகுதியில் 52.0 சதவீதத்தில் இருந்து 52.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.