கட்டணம் அறவிடாத முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இன்று நடைபெற்ற மகளிர் மற்றும் குழந்தை விருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதி மற்றுமு் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சின் எதிர்காலத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தொடர்பாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்பள்ளி ஆசிரியர்கள் சங்கடத்திற்கு உட்படாத வகையிலான மேற்பார்வையும் வழிகாட்டல் முறையையும் அறிமுகப்படுத்துவதும் இத்துறையின் மற்றொரு இலக்காக அடையாளம் காணப்பட்டுள்ளது. முன்பிள்ளை விருத்திக்கு உதவக் கூடிய சாதனங்களை உள்நாட்டில் தயாரித்து வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தாத அறிவிக்கப்பட்டுள்ளது.