கர்ப்பிணிகளுக்கா கல்வி அமைச்சு அறிமுகப்படுத்திய ஆடைக்கு எதிராக எந்த அதிபராயினும் செயற்பட்டால் அவர்கள் குறித்து கல்வி அமைச்சுக்கு முறையிடுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிகளுக்கு இலகுவான மற்றும் சௌகரியமான ஆடை மாதிரி ஒன்று கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
2018/21 என்ற இலக்கத்தைக் கொண்ட 2018/05/23 ஆம் திகதியைக் கொண்ட சுற்றுநிருபம் ஒன்றை இதற்காக கல்வி அமைச்சு வௌியிட்டிருந்தது.
எனினும் சில அதிபர்கள் குறித்த ஆடையை பாடசாலைக்கு அணிந்து வருவதை தடை செய்திருப்பதாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அதிபர்கள் தொடர்பாக1988 என்ற இலக்கத்தின் ஊடாக கல்வி அமைச்சுக்கு அறிவிக்க முடியும்.