2378 பேருக்கு கற்பித்தலில் தேசிய டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (22) காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
அலரிமாளிகையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரி, மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திருமதி குணசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர்.