வனஜீவிப் பாதுகாப்பு மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பாக பாடசாலைக் கலைத்திட்டத்தில் உள்ளடக்கங்களைச் சேர்ப்பதற்கு வனப்பாதுகாப்பு அமைச்சர் கல்வி அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ள முன்மொழிவுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அமைச்சின் ஊடகச் செயலாளர் நிமல் யடிவல்ல தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் ஊடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் சி.பி ரத்னாயக்க வனஜீவி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஆரம்ப வகுப்பு முதல் பல்கலைக்கழக கற்கைககள் வரை இப்பாடத் துறையை விருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.