தேசிய கல்வி நிறுவகம் நடாத்தும் கலைமாணி (பொது) பாடநெறிக்கான இரண்டாம் வருடப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவக வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
இப்பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் 3 ஆம் திகதி முதல் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் ஏனைய சில காரணங்களை முன்னிட்டு பிற்போடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இப்பரீட்சை க.பொ.த உயர் தரம் முடிவடைந்த பின்னர், நவம்பர் மாதமளவில் நடாத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிய முடியகிறது.