தேசிய கல்வி நிறுவகத்தின் 2013/2015 கல்விமாணி பாடநெறியின் தற்காலிக பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறியமுடிகின்றது.
தேசிய கல்வி நிறுவக கல்வி மாணியின் மூன்று வருடங்களுக்குமான பெறுபேறுகள் தனித்தனியாக வெளியிடப்பட்ட போதிலும் இறுதிப் பெறுபேறு இன்னமும் வெளியாகவில்லை. இதன் காரணமாக கல்வி முதுமாணி முதலான பாடநெறிக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இதனைக் கருத்திற் கொண்டு இறுதிப் பெறுபேற்றை தற்காலிக அடிப்படையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.
பெறுபேறு உடனடியாகத் தேவைப்படும் காரணத்தைக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை வழங்குவதன் மூலம் தற்காலிக பெறுபேற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.
எதிர்வரும் மூன்றாம் வாரமளவில் இறுதிப் பெறுபெற்றை வெளியிட உத்தேசித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.