ஆங்கிலக் கல்வி ஆண்டு ஒன்று தொடக்கம் பல்கலைக்கழக கல்விவரை விரிந்து பரந்திருந்தாலும், அதன் வெளியீடு வீழ்ச்சியாகவே உள்ளதை வடக்கில் அவதானிக்க முடிகிறது.
எனினும், இதை ஆராய்வது இங்கு நோக்கமல்ல. மாணவரிடையே க .பொ .த (சா.த) ஆங்கில மொழி சார்பான விழிப்பை தூண்டுவதே நோக்கமாகும்.
கல்வியியல் கல்லூரி அனுமதியில் குறிப்பிட்ட கற்கை சார்பாக, க .பொ .த .(உ .த) எல்லாத் தகைமைகளையும் கொண்டிருந்தும் ஆங்கிலத்தில் போதிய சித்தியின்மையால் தாம் விரும்பிய சில கற்கை நெறிகளை தேர்வு செய்ய முடியாது தவிப்பதைக் காண முடிகிறது.
இதற்கு இது பற்றிய முன்னறிவு எல்லா மாணவர்களிடமும் இன்மையே இதற்கு முக்கிய காரணமாகும்.
இதனை எல்லா மாணவர்களும் பெற்றுக் கொண்டு எதிர் காலத்தில் இத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ய இலகுவாக அமைய வேண்டும்
ஆங்கிலமொழி தேவைப்பாடுகொண்ட கற்கைநெறிகள்
01. ஆரம்பக்கல்வி
க .பொ .த .(சா .த) ல் ஆங்கில மொழியில் சாதாரண சித்தி (S) வேண்டப்படுகிறது. ஏனைய தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்தாலும், ஆங்கில மொழித் தேவைப்பாட்டால் இக்கற்கை நெறியினை பலர் இழக்கின்றனர்.
02. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
க .பொ .த .(சா .த) ல் ஆங்கில மொழியில் திறமை சித்தி (C) / ஆங்கில இலக்கியத்தில் சாதாரண சித்தி (S)
03. மேற்கத்தேய சங்கீதம்
க .பொ .த .(சா .த) ல் ஆங்கில மொழியில் திறமை சித்தி (C) / ஆங்கில இலக்கியத்தில் சாதாரண சித்தி (S)
04. ஆங்கிலம்
க .பொ .த .(சா.த) ல் ஆங்கில மொழியில் திறமை சித்தி (C) / ஆங்கில இலக்கியத்தில் சாதாரண சித்தி (S)
இங்கு இக்கற்கைகளுக்கு வேறு தேவைப்பாடுகளும் உண்டு. எனினும் ஆங்கிலத்தின் முக்கியத்தும் கருதி அதன் தேவைப்பாடே இங்கு நோக்கப்பட்டுள்ளது.
க .பொ .த .(சா.த) ஆங்கிலமானது கல்வியல் கல்லூரிக்கு மட்டுமல்லாது பல்கலைக்கழக கற்கைகளுக்கும், வேலை வாய்ப்பிற்கும் முக்கிய தகைமையாக நோக்கப்படுவதால்,
அதன் முக்கியத்துவம் நோக்கி மாணவர்களை நகர்த்தும் பொறுப்பு எல்லோரிடத்திலும் உண்டு .
உங்கள்,
– சேரா –