கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை எதிர்வரும் செவ்வாய்கிழமை (21) நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டிலுள்ள 20 கல்வியியல் கல்லூரிகளில் நடைபெறவுள்ள இப்பரீட்சைக்கு சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் தோற்ற உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி பூஜித்த தெரிவித்தார். இப்பரீட்சைகள் 31ம் திகதி நிறைவடையும்.
இப்பரீட்சை நாட்டின் ஏற்பட்ட அசாதாரண நிலமை காரணமாக பல தடவைகள் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
——————————————
இப்பரீட்சை எதிர்வரும் புதன்கிழமை நடைபெறும் என இலங்கை அரச தகவல் திணைக்களத்தின் இணையத்தளத்தில் செய்தியொன்று நேற்று வெளியாகியிருந்தது.
எனினும், அதில் உண்மையில்லை. பரீட்சை செவ்வாய்கிழமை திட்டமிட்டபடி ஆரம்பமாகும் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.