தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சியை முடித்து வெளியேறியுள்ள சுமார் 4500 பேருக்கு நியனம் வழங்காது, அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு உயர் தரப்பரீட்சைக்குத் தோற்றிய 2017-2019 கல்வியாண்டுக்காக கல்வியியல் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்பட்டவர்களது தற்போது பயிற்சி நிறைவு செய்யப்பட்டு இறுதிப் பரீட்சை பெறுபேறும் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கு நியமனம் வழங்காது அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இது பெரும் அநீதியாகும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர் நியனம் அரசியல் நடவடிக்கையாகவே இடம்பெறுவதகாகக் குற்றம்சாட்டிய அவர், இதன் மூலம் கல்வித் துறையின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகிவிடும் என்றும் எச்சரித்தார்.
போட்டிப் பரீட்சை இன்றி உள்ளீர்க்கப்பட வுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களது நியனம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இதன் மூலம் தகுதியற்றவர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்படவாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.