கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இடம் பெற்ற நேற்றைதினம் (15) கல்வி அமைச்சர் தொடர்ச்சியாக பத்து மணித்தியாலயங்கள் பாராளுமன்றில் அமர்ந்திருந்து தொடுக்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தமையை ஆளுங்கஙட்சி, எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுன்ற செய்தியாளர்களும் பாராட்டியுள்ளனர்.
பாராளுமன்றில் விவாதம் 9.30 க்கு ஆரம்பமானது முதல் மாலை 7.00 மணிக்கு விவாதம் நிறைவுறும் வரை தொடர்ச்சியாக அமைச்சர் ஒருவர் பாராளுன்றில் இருந்து அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிப்பது அபூர்வமான நிகழ்வு என்று அவர்கள் பாராட்டியுள்ளனர்.
விடுக்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்த விதம் காரணமாக பாராளுமன்ற செய்தியாளர்களும் சௌகரியமாக செய்திகளை சேகரிக்க முடிந்ததாகும் அவர்கள் பாராட்டியுள்ளனர்.
இவ்வாறு சில இணையத்தளங்கள் கல்வி அமைச்சரைப் பாராட்டிய போதிலும் கல்வி அமைச்சர் நாட்டையும் பாராளுன்றையும் ஏமாற்றும் வகையில் பல பிழையான தகவல்களை வழங்கியுள்ளதாக ஆசிரியர்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கல்வி அமைச்சரின் இந்த பிழையான பதில்கள் பற்றி இணையத்தள பின்னூட்டங்கள் ஊடாக ஆசிரியர்கள் பலர் தமது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.