கல்வி அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினராக மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆட்சி மாற்றத்திற்கு முன்னர் இம்ரான் மஹ்ரூப் கண்காணிப்பு உறுப்பினராகக் கடமையாற்றினார்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் கல்வி அமைச்சராக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டதோடு ராஜாங்க கல்வி அமைச்சராக விஜயகலா மகேஷ்வரன் நியமிக்கப்பட்டார்.
சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற மூன்று இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அரசியல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவதை மீண்டும் கல்வி அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினராக இம்ரான் மஹ்ரூப் நியமிக்கப்பட்டமை உறுதிப்படுத்தியுள்ளது.