வகுப்பறைக்கு வெளியே நடைபெறும் அனைத்து செயற்பாடுகளை மட்டுப்படுத்துமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
வகுப்பறைக்கு வெளியே நடைபெறும் செயற்பாடுகளை மட்டுப்படுத்துமாறு கோரும் அறிவித்தல் அனைத்து மாகாண கல்விப் பணிப்பளர்களுக்கும் கல்வி அமைச்சு அனுப்பியுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் என்.எம்.எம். சித்திரானந்த இது தொடர்பான அறிவுறுத்தல் படிவம் ஒன்று அனைத்து மாகாணங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த அறிவுறுத்தல் பத்திரத்தை அதிபர்களுக்கு கிடைக்கச் செய்யுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் வேண்டியுள்ளார்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வரும் மாணவர்களையும் பெற்றாரையும் 14 நாட்கள் நோய் அவதான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.