கல்வி அமைச்சின் புதிய செயலாளராக திரு நிஹால் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களிடமிருந்து திரு நிஹால் ரணசிங்க தனக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக் காெண்டார்.
இதற்கு முன்னர், ரணசிங்க அவர்கள் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பொதுக்கட்டுப்பாட்டளராக கடமையாற்றினார்.
கல்வி அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றிய பத்மசிரி ஜயமான்ன ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.