கல்வி ஒளிபரப்புச் சேவை முன்னரை விட விஸ்தரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது வரை அரச தொலைக்காட்சி அலைவரிசைகளில் மாத்திரமே மேற்கொள்ளப்டப்பட்டு வந்த ஒளிபரப்புச் சேவை இதன் பிறகு தனியார் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பும் வகையில் இச்சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப வகுப்புகள் முதல் உயர் தரம ்வரை அனைத்து வகுப்புகளுக்குமான அனைத்து பிரதான பாடங்களும் கற்பிக்கும் வகையில் இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் எதிர்வரும் 9 வாரங்களுக்கான ஒளிபரப்புக்களை பிரதானமாக மூன்றாம் தவணைப் பாடங்களை மையப்படுத்தி முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒளிபரப்பாகவுள்ள இந்த கல்வி ஒளிபரப்புக்கான திட்டத்தை கல்வி மறுசீரமைப்பு மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டுக்கான ராஜாங்க அமைச்சு அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தது.
இந்த பிரேரணைக்கு நேற்றுக் கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.