உத்தேச கல்வி மறுசீரமைப்பு தொடர்பான மக்களின் கருத்துக்கணிப்பை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்வி மறுசீரமைப்பிற்கான ஆலோசனைகள் மற்றும் காத்திரமான யோசனைகளை முன்வைக்கும் இந்த செயற்றிட்டம் டிஜிட்டல் மேடை (Digital Platform) என பெயரிடப்பட்டுள்ளது.
இன்று முதல் மூன்று மாத காலத்திற்குள் https://egenuma.moe.gov.lk/public/showLanguage.mvc எனும் இணையதளத்தின் ஊடாக டிஜிட்டல் மேடையில் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தார்,
நான் கடந்த காலத்தில் 60,000 பட்டதாரிகளுக்கு தொழில் கொடுத்தேன். இவர்களுக்கு நாம் எவ்வாறு சம்பளம் கொடுப்பது, மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவது. நமது மொத்த தேசிய உற்பத்தியில் இவர்கள் ஒருவரேனும் தொடர்புபடாவிட்டால், எந்தவொரு கல்வியறிவுமின்றி கொழுந்து பறித்து வௌிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து நாம் ஈட்டும் அந்நிய செலாவணி, இல்லாவிட்டால் எந்தவொரு கல்வியறிவுமின்றி மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று தொழில் செய்து கொண்டு வரும் பணம், அல்லாவிட்டால் தொழிற்சாலையில் வேலை செய்து உற்பத்திக்கு பங்களிப்பு செய்வதில் கிடைக்கும் நிதியில் அவர்களுக்கு சம்பளத்தைக் கொடுக்கின்றோம். உற்பத்தியில் தொடர்புபடாதவர்களுக்கு சம்ளத்தைக் கொடுக்கின்றோம். அது எந்தளவிற்கு நியாயம்? அதற்காக அவர்களை எம்மால் குறைகூற முடியாது. நாம் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தினோம். கல்வியை தாய்மொழியில் தொடர ஆரம்பித்தோம். இவை இந்த சந்தர்ப்பங்களில் செய்த நல்ல விடயங்கள். ஆனால், காலம் கடக்கும் போது அந்த நல்ல விடயங்களில் குறைபாடுகளை சரிப்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறானதொரு செயற்பாட்டுக்கு தற்போது தயாராகி வருகின்றோம். காலம் தாழ்த்திய கல்வி செயற்பாடுகளால் நாடு பின்னோக்கி நகருமே தவிர முன்னோக்கிச் செல்லாது.
நியுஸ் பெஸ்ட்