தற்பொழுது கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்காக வருடாந்தம் சுமார் 250 000 மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களுள் 160 000 மாணவர்கள் பல்கலைக்கழக கல்விக்கு தகுதி பெறுகின்றனர். கல்வி முதன்மை நிலமை அடிப்படையிலான தனிப்பட்ட மேம்பாட்டுக்கு ஒத்துளைப்பு வழங்குதல் மற்றும் தொழில் அபிவிருத்தியை நோக்கமாக கொண்டும் இந்த மாணவர்கள் மத்தியில் பௌதீக விஞ்ஞானம், தொழில்நுட்பம், வணிகம், கலை ஆகிய கற்கை நெறிகள் தொடர்பில் ஆகக் கூடுதலான தகுதியைக் கொண்டுள்ள மாணவர்களுக்கு அவாட், எம் ஐடி, ஒக்ஸ்போர்ட், கேம்பிறீச் போன்ற உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் பட்ட கற்கைநெறியை கற்பதற்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இதற்கு அமைவாக 2019 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் உத்தேச கல்வி முதன்மை நிலைக்காக புலமைப்பரிசில் நிதியத்தை SEE Fund ஸ்தாபிப்பதற்காக பாராளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான சட்ட திருத்தத்தை தயாரிக்குமாறு சட்ட திருத்த வரைவுப்பிரிவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த அவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.