கம்பஹா மற்றும் களனிப் பிரதேசங்களில் வாழும் தமிழர்களுக்காக களனி கல்வி வலயத்தை மையப்படுத்தி ஆரம்பிப்பதற்காக அமைச்சர் மனோ கனேசன் முன்வைத்த பிரேரணையை அமைச்சரவை அங்கீகரித்து அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி களனி கல்வி வலயத்தில் அருள்மாணிக்கவாசகம் இந்து வித்தியாலயம் என்ற பெயரில் தேசிய பாடசாலை ஒன்று அமைக்கப்படும். கல்வி அமைச்சுக்கு கிடைக்கும் அன்பளிப்பு வகைக் காணியில் இப்பாடசாலையை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.