காகித விலையும் உயர்வு, புத்தக வெளியீட்டை பாதிக்கிறது
நாட்டில் நிலவும் கடும் டொலர் நெருக்கடி காரணமாக புத்தக வெளியீட்டிற்கு பயன்படுத்தப்படும் 70gsm காகிதத்தின் விலை சுமார் 2000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் உபாலி வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, இதற்கு முன்பு இருந்த ரூ.3,000 காகிதம் ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்றாலும், விலைவாசி உயர்வால் தற்போது சில பதிப்பகங்கள் மூடப்படும் நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
காகித விலை உயர்வால் புத்தகத்தின் விலையை 50% உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என செயலாளர் தெரிவித்துள்ளார்.