கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்ப புதிதாக போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படும் என உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் H.H.M.சித்ராநந்த தெரிவித்துள்ளார்.
காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே நடைபெற்ற பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு நேர்முகத் தேர்வுகளை மேற்கொண்டு இதற்கமைய, நியமனங்களை வழங்க பிரேரிக்கப்பட்ட போதிலும் அதற்கு அரச சேவை ஆணைக்குழு உடன்படவில்லை என்பதோடு புதிதாக பரீட்சை ஒன்றை நடாத்தி அதன் பின்னர் நேர்முகத் தேர்வினை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே. விரைவில் விண்ணப்பங்கோரலுக்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.