எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா தவிர்க்க முடியாத காரணங்களினால் எதிர்வரும் 2020 பெப்ரவரி மாதம் வரை பிற்போடப்படுவதாக பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி பதிவாளர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அவரது குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவும் பிற்போடப்பட்டுள்ளமை நினைவூட்டத்தக்கது.