கிழக்கு மாகாண ஆங்கில ஆசிரியர் போட்டிப் பரீட்சை இரத்து.
(மொகமட் முக்தார்)
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் கடந்த 27 ம் திகதி நடாத்தப்பட்ட ஆங்கில ஆசிரியர் போட்டிப் பரீட்சையை கிழக்கு மாகாண ஆளுனர் இரத்துச் செய்துள்ளார்.
பரீட்சைக்கு முன்னரே வினாத்தாளின் சில வினாக்கள் வெளியானதாகவும் மட்டக்களப்பு தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் ஊடாகவே இவ்வினாத்தாள்கள் வெளியானதாகவும் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளை அடுத்தே மாகாண ஆளுனர் இதனை இரத்துச் செய்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக விசாரணை செய்யுமாறு குற்றப்புலனாய்வு பொலிசாரிடம் கேட்டுள்ளார்.
முக்தார் சேரின் முகநூல் பதிவைப் பார்க்க