கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் நேர்முகப் பரீட்சை இம்மாதம் 25,26 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 811 தொண்டர் ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான கோரிக்கையை அமைச்சரவை அங்கீகரித்து அனுமதித்துள்ளது.
இதன்படி குறித்த நியமனங்களை வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு இம்மாதம் 25, 26 ஆகிய தினங்களில் நடைபெற தீர்மானிக்கப்பட்டு்ளளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஏற்கனவே கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு ஏற்ப விண்ணப்பித்தவர்களில் நேர்முகத் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் பட்டியலை இன்று வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நேர்முகப் பரீட்சைக்கான தெரிவுப் பட்டியலை www.ep.gov.lk எனும் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.