வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய ரீதியான பெறுபேற்றில் ஓரளவு வீழ்ச்சி அவதானிக்கத்தக்கது. 2018 ஆம் ஆண்டு அனைத்துப் பாடங்களிலும் (ஆகக்குறைந்தது 6 பாடங்களில் தோற்றியவர்கள்) சித்தியடையாதவர்களின் வீதம் 2. ஆகக் காணப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஒரு பாடத்திலேனும் சித்தியடையாதவர்களின் வீதம் 2.29 ஆக அதிகரித்துள்ளது.
உயர் தரத்திற்கு தகுதி பெற்றவர்களின் வீதம் கடந்த வருடம் 75.09 ஆகக் காணப்பட்டது. அது இவ்வருடம் 73.54 ஆகக் குறைந்துள்ளது.
மாகாணங்களுக்கிடையில் சில முன்னேற்றங்கள் பின்னடைவுகள் காணப்பட்டாலும் கிழக்கு மகாணம் மற்றும் வடக்கு மாகாணத்தின் அடைவுகளை குறிப்பிடத்தக்கதாக அவதானிக்க முடியும்
கிழக்கு மாகாணம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் கடந்த வருடத்தை விட முன்னேற்றதைக் காண்பித்துள்ளது. கடந்த வருடம் 2018 இல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றின் தரப்படுத்தலின் அடிப்படையில் இறுதி இடத்தைப் பெற்றிருந்த கிழக்கு மாகாணம் இவ்வருடம் 2019 இல் 7 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அதே நேரம் வடக்கு மாகாணம் 2018 ஆம் ஆண்டு பெறுபேறுகளின் அடிப்படையில் 8 ஆம் இடத்தைப் பெற்றிருந்தது. எனினும் இம்முறை 9 ஆம் இடத்தை அடைந்துள்ளது.
2018 ஆம் ஆண்டு
1. தென் மாகாணம் உயர் தரத்திற்கு தகுதி வீதம் 80.42 அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் வீதம் 1.11
2. வடமேல் மாகாணம் உயர் தரத்திற்கு தகுதி வீதம் 76.96 அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் வீதம் 1.57
3. மேல் மாகாணம் உயர் தரத்திற்கு தகுதி வீதம் 76.67 அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் வீதம் 2.04
4. சப்ரகமுவ மாகாணம் உயர் தரத்திற்கு தகுதி வீதம் 76.15 அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் வீதம் 2.04
5. வட மத்திய மாகாணம் உயர் தரத்திற்கு தகுதி வீதம் 72.78 அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் வீதம் 2.56
6. ஊவா மாகாணம் உயர் தரத்திற்கு தகுதி வீதம் 72.39 அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் வீதம் 2.41
7. மத்திய மாகாணம் உயர் தரத்திற்கு தகுதி வீதம் 72.38 அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் வீதம் 2.26
8. வடக்கு மாகாணம் உயர் தரத்திற்கு தகுதி வீதம் 69.99 அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் வீதம் 2.55
9. கிழக்கு மாகாணம் உயர் தரத்திற்கு தகுதி வீதம் 69.97 அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் வீதம் 2.18
தேசியளவில் உயர் தரத்திற்கு தகுதி வீதம் 75.09 அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் வீதம் 2.00
2019 ஆம் ஆண்டு
1. தென் மாகாணம் உயர் தரத்திற்கு தகுதி வீதம் 78.31 அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் வீதம் 1.60
2. மேல் மாகாணம் உயர் தரத்திற்கு தகுதி வீதம் 76.00 அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் வீதம் 2.29
3. வடமேல் மாகாணம் உயர் தரத்திற்கு தகுதி வீதம் 75.27 அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் வீதம் 1.88
4. சப்ரகமுவ மாகாணம் உயர் தரத்திற்கு தகுதி வீதம் 75.00 அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் வீதம் 2.23
5. வட மத்திய மாகாணம் உயர் தரத்திற்கு தகுதி வீதம் 71.78 அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் வீதம் 3.11
6. மத்திய மாகாணம் உயர் தரத்திற்கு தகுதி வீதம் 70. 94 அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் வீதம் 2.32
7. கிழக்கு மாகாணம் உயர் தரத்திற்கு தகுதி வீதம் 70.25 அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் வீதம் 2.48
8. ஊவா மாகாணம் உயர் தரத்திற்கு தகுதி வீதம் 70.15 அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் வீதம் 2.99
9. வடக்கு மாகாணம் உயர் தரத்திற்கு தகுதி வீதம் 67.74 அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் வீதம் 2.63
தேசியளவில் உயர் தரத்திற்கு தகுதி வீதம் 73.54 அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் வீதம் 2.29