கல்பிட்டி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வேறொரு மாணவர் சார்பாக க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தொற்றிய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பரீட்சை மண்டபத்தின் மேற்பார்வையாளர்கள் சந்தேகத்தின் காரணமாக விசாரணை நடத்தியதன் பின்னர் உண்மை தெரிய வந்துள்ளது.
பின்னர் அவரை கல்பிட்டிய காவல்துறையினர் கைது செய்தனர், சந்தேக நபர் களனி பல்கலைக்கழக மாணவர் என்பது தெரியவந்துள்ளது.
அவர் தேர்வு தொடங்கியதிலிருந்தே சம்பந்தப்பட்ட பரீட்சார்த்திக்காக குதிரை ஓடியுள்ளதாக தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்ட மாணவன் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்