இலங்கையில் 50 க்குக் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள 1400 பாடசாலைகளும் 100 க்கு குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள 3000 பாடசாலைகளும் காணப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கையில் 76 வீதமானவை 500 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கையைக் கொண்டவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
35 மாணவர்களுக்கும் குறைவாக கொண்டுள்ள பாடசாலைகளுக்கும் அனைத்து ஆசிரியர்களையும் வழங்குவது, அரசில் கல்விச் செலவீனத்தில் முழுமையான பயன் அடைய முடியாது எனவும் அவர் கூறினார்.