மாணவர்களுக்கான பரீட்சை ஏற்பாடு
கொவிட்19 தொற்றுக்கான மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு பரீட்சைக்குத் தோற்றுவதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு வலயக் கல்வி அலுவலகத்தினூடாகவும் பெயரிடப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட விசேட பரீட்சை நிலையத்தில் பரீட்சை ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கான விபரங்கள் வலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கோவிட் தொற்று ஏற்பட்டுள்ள மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தரம் 5 மாணவர்கள் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கு பரீட்சை எழுதுவதற்கான அனுப்பப்படல் வேண்டும்.
பரீட்சை நிலையங்களுக்கு மாணவர்களை பாதுகாப்பான முறையில் நிலையத்திற்கு அழைத்துச் செல்வது பெற்றாரின் பொறுப்பாகும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிபர் ஊடாக வலயக் கல்வி அலுவலகத்திற்கு அறிவிக்கப்படல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வலயத்திற்கு அண்மையில் வேறு வலயத்தைச் சார்ந்த மாணவர்களை அனுமதிப்பதில் தடை இல்லை என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை நேரத்தின் போது, ஏதேனும் மாணவர்கள் நோய் அறிகுறியைக் காண்பித்தால், அவர்களுக்கு பரீட்சை நிலையத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள விசேட அறையில் பரீட்சை எழுத ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு்ளளதாகவும் அறிவிக்கப்பட்டு்ள்ளது.