காெரோனா தொற்றாளர் ஒருவர் கல்கிஸ்ஸ படோவிட பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளத, அவர் மினுவங்கொட பிரேண்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும் அவர் கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரேண்டிக்ஸ் தலைமை அலுவலகத்திற்கும் விஜயம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
அவ்வாறே குறித்த நபர் 27 ஆம் திகதி கொழும்பு புத்தக கண்காட்சிக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இவரின் மனைவி வைத்தியர் என்பதோடு, பிரசவ விடுமுறையில் அவர் தமது வீட்டில் தங்கியுள்ளார்.
இவர் தற்போது இராணவில பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.