கொழும்பு கல்வி வலயத்தின் முஸ்லிம் பாடசாலைகள் றமழான் விடுமுறை காலத்தில் கபொத சாதாரண தர மாணவர்களுக்காக ஒழுங்கு செய்திருந்த மேலதிக வகுப்புக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
கல்வி வலயத்தின் அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரிலேயே வகுப்புக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அதிபர் ஒருவர் தெரிவித்தார்.
பாடசாலைகள் விடுமுறைக்காக மூடுப்பட்டாலும் கூட தரம் 11 மாணவர்களுக்கான மேலதிக வழிகாட்டல்கள் வகுப்புக்களின் ஊடாக தேர்ச்சி மட்டத்தை அதிகரிப்பதற்கான திட்டத்தின் அடிப்படையில் பல பாடசாலைகள் மேலதிக வகுப்புக்களைத் திட்டமிட்டிருந்நதன.
சில பாடசாலைகள் மேலதிக வகுப்புக்களை திங்கள் ஆரம்பித்திருந்தன. மாணவர்களின் பங்குபற்றுதலும் குறிப்பிடும்படி காணப்பட்டன.
எனினும் இன்று வலயக் கல்விப் பணிமனையிலிருந்து கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தலுக்கு அமைய மறு அறிவித்தல் வரை மேலதிக வகுப்புக்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டதாக பாடசாலைகள் தீர்மானித்துள்ளன.