கொவிட் – 19 தொற்று நிலைமையின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்டிருந்த கொழும்பு நூலகத்தின் சிறுவர் நூல்கள் மற்றும் முதியோர் நூல்கள் பரிமாறல் நேரம் நேற்று (04) தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இதன் செயற்பாடுகள் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரையிலும் வாசகர்களுக்கு மீண்டும் சேவைகளை வழங்குவதற்கு தற்பொழுது ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் நேற்று (04) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இந்த நூலகத்தின் சேவை திங்கட்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரையிலும் வாரத்தில் 6 நாட்களுக்கு இந்த காலப்பகுதியில் திறந்திருப்பதுடன், கல்வி நடவடிக்கையில் ஈடுப்படும் பல்கலைக்கழக மாணவர்களுக்காக கல்வி மண்டல வசதிகள் மற்றும் ஆய்வு நூலகம் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பொது நூலகத்தின் இணையத்தள (Open Public Access Catalogue) Pl.colombo.mc.gov.lk மூலமும் பிரவேசிக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில்; தெரிவிக்கப்பட்டுள்ளது.