கொவிட் கால கல்வி நெருக்கடியை எதிர்கொள்வதற்கான 10 அம்ச கொள்கைத் திட்டம்
01. தொலைக்காட்சி, வாட்ஸ்அப் அல்லது அச்சுப் பிரதிகள் வாயிலாக வழங்கப்படுகின்ற பாட உள்ளடக்கங்களை கல்வி என்று கூற முடியாது.
02. பெற்றோர்களிடம் ஆசிரியர்களின் வகிபங்கை எதிர்ப்பார்க்க முடியாது, அது பிழையான விடையமாகும். பாடசாலை நடைபெற வேண்டிய நாட்களில் வீடுகளில் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள மாணவர்களை காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை கற்றலில் ஈடுபடச் செய்தல் பாடசாலைகளின் கடமையாகும்.
03. மொழி, கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் அவற்றின் அடிப்படைத் தேர்ச்சிகளை அடையும் வகையில் சுருக்கமான பாடத்திட்டங்களை வழங்குவதுடன் ஏனைய பாடங்களை ஒன்றிணைத்துக் கற்பிப்பதற்காக ஆசிரியர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
04.ஐந்தாம் தரம் தொடக்கம் அனைத்து கற்றல் மட்டங்களுக்குமான மாணவர்களின் கட்டாயத் தேர்ச்சி அடைவை மதிப்பிடுவதற்கு நிகழ்நிலை கணிப்பீட்டு பரீட்சைகள்.
05. தத்தமது பிரதேசங்களது நிலகைளுக்கேற்ப மாணவர்களை கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வைத்திருப்பதற்கு பொருத்தமான வழிமுறைகளை கண்டடைவதற்கும் அதற்காக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உதவியளிப்பதற்கும் ஏற்ற வகையில் அனைத்து அதிகாரங்களும், வளங்களும் கோட்ட மற்றும் வலயப் பணிப்பாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டு அவர்கள் வலுவூட்டப்பட வேண்டும்.
06. வீட்டிலிருந்து கல்வி நடவடிக்கைகயில் ஈடுபடும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கும் அதற்கு உதவி செய்வதற்குமாக, கடந்த காலங்களில் கிராம அலுவலர் பிரிவு மட்டத்தில் நிறுவப்பட்டிருந்த ‘பாடசாலை வருகைக் குழு’ க்களை மீளச் செயற்பட வைத்தல்.
07. பாடசாலைகளை திறப்பது சம்பந்தமான முறைகளட குறித்த தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் பாடசாலையை அண்மித்த அதிகாரிகளை நோக்கி பரவலாக்கப்படல் வேண்டும்.
08. ஆசிரியர்கள் கொவிட் வைரஸினால் பாதிப்படையக்கூடிய முன்னணிப் பணியாளர்களுள் ஒரு சாராராகக் காணப்படுகின்றனர். எனவே, கொவிட் தடுப்பூசி வழங்கும் போது அவர்களுக்கும் முன்னுரிமை வழங்குதல் வேண்டும்.
09. நோய்த் தொற்று ஆபத்து அதிகம் காணப்படும் பிரதேசங்களில் காணப்படும் பாடசாலைகளில் சேவை செய்பவர்களும் மாணவர்களும் தொடர்ச்சியான ஒழங்கில் நோய்த் தொற்று நிலை குறித்த பரிசோதனைக்கு உள்ளாக்கப்படல் வேண்டும்.
10. பாடசாலைகள் இயங்கம் காலப் பகுதியில் கற்பித்தல் நடவடிக்கைகளில் கலவை முறைக்கற்றலை (blended learning) ஒரு நியமமாகக் கடைப்பிடித்தல் வேண்டும்.
கொவிட் பெருந்தொற்று நிலைமை காரணமாக நாட்டின் கல்வித்துறையில் ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 15 மாதங்களாக இலங்கையின் பாடசாலை முறைமை செயலிழந்து போயிருக்கின்றது. இந்த பெருந்தொற்றின் காரணமாக 50% வீதமான மாணவர்களை தொலைக்கல்வி வாயிலாகவும் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கின்றது. தொடர்பு கொள்ள முடியுமானவர்களுக்கும் கூட வட்சப் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக பாட உள்ளடக்கங்களை மாத்திரமே வழங்கி வைக்க முடிகின்றது. 5% வீதமானோர் மாத்திரமே சரியான நிகழ்நிலை கல்வி அனுபவத்தை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக உள்ளனர். இந்த விடயத்தை கவனத்திற் கொண்டு இலங்கையின் கல்வி அமைச்சும் மாகாண கல்வி திணைக்களங்களும் கீழ் வரும் பரிந்துரைகள் குறித்து கவனம் செலுத்தி தாமதமின்றி செயற்பட வேண்டுமென இலங்கை கல்வி அமையம் (Education Forum Sri Lanka) வேண்டுகோள் விடுக்கின்றது.
01. தொலைக்காட்சி, வாட்ஸ்அப் அல்லது அச்சுப் பிரதிகள் வாயிலாக வழங்கப்படுகின்ற பாட உள்ளடக்கங்களை கல்வி என்று கூற முடியாது: COVID-19 காலகட்டத்தில், இலங்கை கல்வி அமைப்பிற்குள் காணப்படுகின்ற வழக்கொழிந்து போன போதனா கற்பித்தல் முறை எதிர்பாராத அமைப்பில் நடைமுறைக்கு வந்தது. ஸ்மார்ட் போன்களை சொந்தமாக வைத்துள்ள பெற்றோர்களுக்கு ஆசரியர்கள் PDF கோப்புகளை வாட்ஸ்அப் வழியாக பெற்றோருக்கு அவர்களுடைய கைபேசியின் கொள்ளளவையும் விஞ்சும் வகையில் அனுப்பி வைத்தனர். அவற்றை பக்கம் பக்கமாக அச்சுப் பிரதி எடுத்து பிள்ளைகளுக்கு கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்தனர். கற்றல் என்பது இவ்வாறாக உள்ளடக்கங்களை பரிமாறிக் கொள்வதால் மாத்திரம் இடம் பெற மாட்டாது. மாற்றமாக ஆசரியர்களின் வழிகாட்டுதல்களுடன் பாட உள்ளடக்கங்களுடன் மாணவர்கள் ஒன்றித்து செயலாற்றுவதனூடாகவே கற்றல் இடம்பெறுகிறது. வருட ஆரம்பத்தில் மாணவர்களுக்கு கிடைக்கச் செய்யப்பட்டிருக்க வேண்டிய இலவசப் பாடநூல்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்ற வழிகாட்டல்களை மாத்திரமே ஆசிரியர்கள் அனுப்ப வேண்டியிருக்கும்.
02.பெற்றோர்களிடம் ஆசிரியர்களின் வகிபங்கை எதிர்ப்பார்க்க முடியாது, அது பிழையான விடையமாகும். பாடசாலை நடைபெற வேண்டிய நாட்களில் வீடுகளில் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள மாணவர்களை காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை கற்றலில் ஈடுபடச் செய்தல் பாடசாலைகளின் கடமையாகும்: மாணவர்களுக்கு ஒரு வாராந்த சுயகற்றல் திட்டம் வழங்கப்பட்டு, அது தொடர்பில் தினம் ஒரு முறையாவது பிள்ளைகளை தொடர்பு கொண்டு அதன் முன்னேற்றம் குறித்து அவதானிக்கப்படல் வேண்டும். இலங்கையில் 96% வீதமான குடும்பங்களில் கையடக்க தொலைபேசி வசதி உள்ளது. சாதாரண அனலொக் தொலைபேசியை பாவித்து குழுவாக தொலைபேசி கலந்துரையாடலை (Teleconferencing) நடாத்த முடியும். அதற்காக Dialog நிறுவனத்தால் வழங்கப்படும் 1377 போன்ற சேவைகள் உள்ளன. இலங்கையில் சராசரியாக ஒவ்வொரு 16 மாணவர்களுக்கும் ஓர் ஆசிரியர் வீதம் இருக்கின்றனர். எனவே, ஒரு நாளைக்கு ஒரு ஆசிரியராவது ஒரு பிள்ளையை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று நியாயம் கூற முடியாது.
03.மொழி, கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் அவற்றின் அடிப்படைத் தேர்ச்சிகளை அடையும் வகையில் சுருக்கமான பாடத்திட்டங்களை வழங்குவதுடன் ஏனைய பாடங்களை ஒன்றிணைத்துக் கற்பிப்பதற்காக ஆசிரியர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
04.ஐந்தாம் தரம் தொடக்கம் அனைத்து கற்றல் மட்டங்களுக்குமான மாணவர்களின் கட்டாயத் தேர்ச்சி அடைவை மதிப்பிடுவதற்கு நிகழ்நிலை கணிப்பீட்டு பரீட்சைகள்: ஒவ்வொரு தரப்பினரின் இயலுமைக்கு ஏற்ப இந்த பரீட்சையை நிகழ்நிலை வழியாகவோ அல்லது வினாப்பத்திரங்களாகவோ மாணவர்களுக்கு வழங்கப்பட முடியும்.
05. தத்தமது பிரதேசங்களது நிலகைளுக்கேற்ப மாணவர்களை கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வைத்திருப்பதற்கு பொருத்தமான வழிமுறைகளை கண்டடைவதற்கும் அதற்காக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உதவியளிப்பதற்கும் ஏற்ற வகையில் அனைத்து அதிகாரங்களும், வளங்களும் கோட்ட மற்றும் வலயப் பணிப்பாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டு அவர்கள் வலுவூட்டப்பட வேண்டும்: பாடசாலைக் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியில் 95% வீதமானவை பாடசாலை ஆளணியினருக்கு சம்பளம் வழங்குவதற்காகவே ஒதுக்கப்படுகிறது. மகிச் சிறிய ஒரு சதவிகிதமே மாணவர், ஆசிரியர், பாடசாலை அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்படுகின்றன. செல்வந்தப் பெற்றோர் உள்ள பாடசாலைகள் தமது அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக மேலதிக நிதியை சேகரித்துக் கொள்கின்றன. அதே நேரம் வரிய பெற்றோரைக் கொண்டுள்ள பாடசாலைகளது நிலை அனாதரவானதாகும். அவ்வப் பிரதேசக் கல்வி அதிகாரிகளே தத்தமது பிரதேசங்களின் தேவைகளை அறிந்தவர்கள். எனவே, கோட்ட மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு தமக்குக் கீழால் உள்ள பாடசாலைகளின் குறிப்பான தேவைகளை தங்குதடையின்றி நிறைவு செய்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும்.
06.வீட்டிலிருந்து கல்வி நடவடிக்கைகயில் ஈடுபடும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கும் அதற்கு உதவி செய்வதற்குமாக, கடந்த காலங்களில் கிராம அலுவலர் பிரிவு மட்டத்தில் நிறுவப்பட்டிருந்த ‘பாடசாலை வருகைக் குழு’ க்களை மீளச் செயற்பட வைத்தல் : பதகளிப்புக் கோளாறு கொண்ட பிள்ளைகள், உளநலப்பபிரச்சனைகள் உடைய பிள்ளைகள், சிறுவர் துஷ்பிரயோகம் நிகழும் சூழலில் காணப்படும் வீடுகள், போசனைக் குறைபாடு என்பன பிள்ளைகளின் கல்வியில் பாதிப்புச் செலுத்தும் அடுத்த பிரச்சினைகளாகும். 1997 ஆம் ஆண்டின் 1005 /5 ஆம் இலக்க சட்ட ஒழுங்கின் படி அதிபர், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் மற்றும் உரிய கல்வி, சுகாதார, நலன்புரி அதிகாரிகள் உள்ளடங்கலாக ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் பாடசாலை வருகைக் குழுக்களை (School Attendance Committee) உருவாக்கி பாடசாலை செல்லும் வயதிலுள்ள பிள்ளைகளின் குடும்ப அலகுகள் குறித்து கண்காணிக்க / மேற்பார்வை செய்யப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் உடனடியாக மீள் உருவாக்கப்படல் வேண்டும்.
07.பாடசாலைகளை திறப்பது சம்பந்தமான முறைகளட குறித்த தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் பாடசாலையை அண்மித்த அதிகாரிகளை நோக்கி பரவலாக்கப்படல் வேண்டும்: கொவிட் தொற்று ஆபத்துக் குறித்த குறைந்த அவதானம் காணப்படும் பகுதிகளிலுள்ள பாடசாலைகள் இயங்க அனுமதிக்கப்பட வேண்டும். நோய்த் தொற்று ஆபத்துக் குறித்த அவதானம் அதிகமுள்ள பிரதேசங்களில் கூட சம்பந்தப்பட்ட குழுக்களுடன் இணைந்து அதிபர், ஆசிரியர்களுக்கு தமது பாடசாலைகளை மீளத் திறக்கும் காலப்பகுதி மற்றும் தனிமைப்படுத்தல் மாதிரிகளைத் தீர்மானிப்பதற்கு முடியுமாக இருக்க வேண்டும். பாடசாலைகளை மூடுதல் மற்றும் திறத்தலை குறித்த தீர்மானங்களை கல்வி அமைச்சு மேற்கொள்ளும் போது அவசியமற்ற வகையில் மாணவர்களது கல்வி வாய்ப்பு இல்லாமல் செய்யப்படுகின்றது என்பது எமது அவதானிப்பாகும். பாடசாலைகள் அனைத்தையும் முடிந்தளவு நிரந்தரமாக திறந்து வைப்பதற்கான மூலோபாயத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அந்தத் திட்டத்தினடிப்படையில் தடுப்பூசி வழங்குதல் மற்றும் நோய்த் தோற்றுப் பரிசோதனை என்பன மேற்கொள்ளப்படல் வேண்டும்.
08.ஆசிரியர்கள் கொவிட் வைரஸினால் பாதிப்படையக்கூடிய முன்னணிப் பணியாளர்களுள் ஒரு சாராராகக் காணப்படுகின்றனர். எனவே, கொவிட் தடுப்பூசி வழங்கும் போது அவர்களுக்கும் முன்னுரிமை வழங்குதல் வேண்டும்: சுகாதாரப் பாதுகாப்பு பணியாளர்கள் முன்னணிப் பணியாளர்களாக கவனத்திற் கொள்ளப்பட்டு உடனடியாக தடுப்பூசி வழங்கப்படுவது போன்று பாடசாலைகளை மூடுவதனால் ஏற்படும் சமுக, பொருளாதார ரீதியான பாதிப்புக்களை கவனத்திற்கொண்டு ஆசிரியர்களும் தடுப்பூசி வழங்கப்படும் செயற்திட்டத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.
09. நோய்த் தொற்று ஆபத்து அதிகம் காணப்படும் பிரதேசங்களில் காணப்படும் பாடசாலைகளில் சேவை செய்பவர்களும் மாணவர்களும் தொடர்ச்சியான ஒழங்கில் நோய்த் தொற்று நிலை குறித்த பரிசோதனைக்கு உள்ளாக்கப்படல் வேண்டும்: தொடர்ச்சியான ஒழுங்கில் ஆசிரியர்களையும் மாணவர்களையும் நோய்த் தொற்றுக் குறித்த பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான செலவு குறைந்த ஒரு முறைமை வடிவமைக்கப்பட வேண்டும். இதற்கு UNICEF போன்ற நிறுவனங்களின் அனுசரணை பெற்றுக் கொள்ளப்பட முடியும். ஒரு மாணவர் அல்லது ஆசிரியர் நோய்த் தொற்றுள்ளவராக பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டால் முழுப் பாடசாலையையும் மூடுவதற்குப் பதிலாக தனிப்பட்ட வகுப்பறைகளை அல்லது மாணவர் குழுக்களை தனிமைப்படுத்துவதற்கே தீர்மானிக்கப்பட வேண்டும்.
10.பாடசாலைகள் இயங்கும் காலப் பகுதியில் கற்பித்தல் நடவடிக்கைகளில் கலவை முறைக்கற்றலை (blended learning) ஒரு நியமமாகக் கடைப்பிடித்தல் வேண்டும்: இப்படி இடம் பெறும் போது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அவசரகால நிலையொன்று தோன்றுமிடத்து, வீடுகளை மையமாகக் கொண்ட கற்றலுக்கு சுமுகமாக மறிக்கொள்ள முடியும். இந்த கற்றல் முறைக்கான மாதிரிகளை ஏற்கனவே இவ்வாறான கற்றல் முறைகளை கடைப்பிடித்து வரும் நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
சுஜாதா கமகே மற்றும் தாரா டி மெல்
இணை இணைப்பாளர்கள்
இலங்கை கல்வி அமையம்
தமிழில்
எம்.என்.இக்ராம்