2015 ஆம் ஆண்டிலிருந்து க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சேர்க்கப்பட்டு வரும் கொரிய மொழி 2021 ஆம் ஆண்டு முதல் க.பொ.த உயர் தரத்திற்கும் சேர்க்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வி ஆணைக்குழு வின் பரிந்துரையின் பேரில் சேர்க்கப்பட்டுள்ள கொரிய மொழி, கலைப்பாடத்திற்கான பாடத்தொகுதியில் மொழிப்பாடங்கள் தொடரிலக்கம் 3 இன் கீழ் உள்ளடங்கிய பாடங்களுக்கு மேலதிகமாக கொரிய மொழி பாடமும் உள்ளடக்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரத்தில் தரம் 12 இல் கற்பதற்கு ஆயத்தமாகும் மாணவர்கள் கொரிய மொழிப் பாடத்தைக் கற்கவும், அதனடிப்படையில் பரீட்சை எழுதவும் ஏற்பாடுகள் மேற்காெள்ளப்பட்டுள்ளன.