க.பொ.த சாதார தரப் பரீட்சை பெறுபேறுகள்
இவ்வாரம் தீர்மானிக்கப்படும் – கல்வி அமைச்சர்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான தீர்மானம் ஒரு வாரத்திற்குள் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் தொழில்சங்கப் போராட்டம் மற்றும் கொரோனா காரணமாக நடாத்தி முடிக்கமுடியாமல் போன அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் தாமதம் காரணமாகவே க. பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தாமதமடைந்துள்ளன.
எனவே, அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்றி சாதாரண தரப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான சாத்தியங்கள் குறித்து கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
அத்தோடு, இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை விரைவில் அறிவிப்பதாக கல்வி அமைச்சர் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், மாணவர்களின் அழகியல் பாட செயன்முறைப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்றி வெளியிடப்படும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.