நடைபெற்று முடிந்த க.பொ.த உயர் தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் இறுதியி வாரத்தில் அல்லது ஏப்ரல் ஆரம்பத்தில் வெளிவரும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
இதே வேளை க.பொ. த உயர் தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன.
செயன்முறைப் பரீட்சைகளுக்கான கால அட்டவணையை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளளது.
பெரும்பாலும் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், செயன்முறைப் பரீட்சையின் பெறுபேறுகளைத் தொடர்ந்து பரீட்சைப் புள்ளிகள் இறுதி செய்யப்படும் என தெரியவருகிறது.