அரசாங்கப் பாடசாலைகளில் க.பொ.த உயர் தரத்தில் கற்கும் மாணவர்களுக:கு டெப் கணனி 183000 இலவசகமாக வழங்குதவற்கான செயற்றிட்டத்திற்கு ஜனாதிபதி எதிர்ப்புத் தெரிவித்துள்ள போதிலும் , அதனைப் பொருட்படுத்தாது அமைச்சரை அனுமதித்துள்ளதாக அறியவருகின்றது.
ஜனாதிபதி சரிசேனவின் தலைமையில் நேற்று (7) ஜனாதிபதி காரியாலயத்தில்நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் சமர்ப்பித்திருந்த அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராயப்பட்டது.
இந்த திட்டத்தின் படி 183000 டெப் கணனிகளை கொள்வனவு செய்யும் திட்டத்திற்காக 350 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போது இந்த திட்டத்திற்கு தான் இதற்கு முன்னரும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு இதற்கு முன் பரீட்சார்த்த திட்டத்திற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தார்.
அதற்காக 183000 டெப் கணனிகள் தேவையில்லை என ஜனாதிபதி கூறியதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் போது கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், ஜனாதிபதியின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அறிய முடிகின்றது.