க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு தொடர்பான மீளாய்வு விண்ணப்பங்கள் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித தெரிவித்தார்.
இன்று ஹிரு தொலைக்காட்டியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது அவர் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
தற்போது பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதனால் மீள் திருத்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது. எனவே, பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பாக நாம் அறிவிப்போம் என்று அவர் தெரிவித்தார்.