மார்ச் இறுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறையும் தேசிய மற்றும் மாவட்ட மட்ட சாதனையாளர்கள் பட்டியல் வெளியிடப்படமாட்டாது என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
2019 ஆம் ஆண்டு க. பொ. த சாதாரண தரப் பரீட்சை 4987 மத்திய நிலையங்களில் நடைபெற்றன.
இதே நேரம் உயர் தரப் பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதி 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.