சட்டம் ஒருபாடமாக 2021 ஆம்ஆண்டிலிருந்து பாடசாலைகளில் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்ட நடவடிக்கைகளை தேசிய கல்வி நிறுவகத்துடன் இணைந்து கல்வி அமைச்சு மேற்கொள்வதகா அவர் தெரிவித்தார்.
பாடசாலைக் கலைத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாக அறிமுகப்படுத்துவற்காக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகொரல சமர்ப்பித்த பிரேரணையை அமைச்சரவை அனுமதித்தன் பின்னர், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு தேசிய கல்வி நிறுவகத்திற்கு வழங்கியிருந்தது.
சட்டத்திற்கான பாடத்திட்டம் விருத்தி செய்தல், ஆசிரியர் வழிகாட்டி தயாரித்தல் மற்றும் பயிற்சி, பாடநூல் தயாரித்தல் முதலான பணிகளுக்கு அமைச்சரவைப் பத்திரத்திரத்திற்கேற்ப விசேட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.