சப்ரகமுவ மாகாணத்திற்கு 382ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் உடனடியாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கோப்பேகடுவ தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் (20) இரத்தினபுரி சப்ரகமுவ மாகாண சபைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இரத்தினபுரி வலய அதிபர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சப்ரகமுவ மாகாண ஆளுநர் இதனை தெரிவித்தார்.
இந்த மாதம் 24மற்றும் 25திகதிகளில் இரத்தினபுரியில் அமைந்துள்ள மாகாண கேட்போர் கூடத்தில் இதற்கான நேர்காணல் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
இலங்கையில் பரீட்சைத் திணைக்களத்தால் கடந்த 2019.03.31 நடாத்தப்பட்ட திறந்த போட்டித் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் இதற்காக நியமிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த பரீட்சையில் தேர்ச்சிப் பெற்ற 452 பட்டதாரிகள் இவ்வருடம் ஜனவரி மாதத்தினுள் க.பொ.த உயர்தரத்திற்கு கற்பிப்பதற்காக இணைத்துக் கொள்ளப்பட்டதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கோப்பேகடுவ மேலும் தெரிவித்துள்ளார்.