சப்ரகமுவ மாகாண ஆசிரியர் நியமனம் வழங்கல் வைபவம் எதிர்வரும் 10.03.2021 ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறும் என சப்ரகமுவ மாகாண கல்வி தகவல் தொழிநுட்ப மற்றும் கலாசார விவகார அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
குறித்த வைபவத்தில் பட்டதாரிகள் மற்றும் ஆங்கில உயர் டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவையில் நியமிக்கும் கடிதங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமை தாங்கும் இந்நிகழ்வு மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.