சப்ரகமுவ மாகாணத்தில் புதிதாக 352 ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (3) சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கடந்த 2019.03.31ஆம் திகதி இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்திபெற்ற பட்டதாரிகளைத் தெரிவு செய்து அவர்களுக்குக் கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத்தொகுதியில் நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டு அதில் தெரிவு செய்யப்பட்ட 352 பேருக்கே நேற்றைய தினம் நியமனங்கள் வழங்கப்பட்டதாக மாகாண சபை ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாண பிரதான செயலாளர் டி.எம்.மாலனி, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ருக்மணி ஆரியரத்ன உட்பட மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
(தினகரன்)
(தினகரன்)