ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் க.பொ.த. சாதாரண தரப் பரீடசைக்கான திகதிகள் குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் மீளாய்வுசெய்யப்படும் என கல்வி அமைச்சர்தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
க.பொ.த. சாதாரண தரப் பரீடசைகள் ஜனவரி 18 ஆம் திகதி தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதிலும் கற்றலை நடாத்துவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. தனமைப்படுத்தப்பட்ட சில பிரதேசங்களில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியவில்லை.
இதன் காரணமாக பரீட்சை நடாத்தப்படும் திகதியை மீள திருத்தம் செய்யவேண்டுமா என்பது தொடர்பாக அடுத்த இரு வாரங்களுக்குள் பரிசீலித்து தீர்மானிப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
.