பாடசாலை மாணவர்களை நீண்டகாலமாக துஷ்பிரயோகம் செய்து வீடியோ பதிவு செய்து வந்த ஆசிரியர் ஒருவரை கொல்லுப்பிட்டி பொலிசார் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழு என்பன இணைந்து கைது செய்துள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் 54 வயதான பன்னிப்பிட்டியில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஒரு தனியார் டியுசன் ஆசிரியர் என்று தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அவ்வப்போது குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் மூன்று குழந்தைகளை நேற்று மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப் பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த நபரிடம் 20 க்கும் அதிகமான சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்யும் வீடியோக்கள் காணப்பட்டதாகவும், சில சிறுவர்களை பாடசாலை சீருடை அணிவித்து பின்னர் துஷ்பிரயோகம் செய்து பாலியல் படமாக காட்சிப்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.