வயதின் அடிப்படையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்பான சொற்பிராேயகங்களை பயன்படுத்துவற்கான சட்டரீதியான ஏற்பாட்டிற்கு நீதி அமைச்சு முன்னெடுத்த நடவடிக்கைக்கு அமைச்சரவை அனுமதிவழங்கியுள்ளதாக அமைச்சர் தலதா அதுகொரல தெரிவித்துள்ளார்.
இதன் படி 18 வயது வரையானவர்கள் சிறுவர்கள் என்று அழைக்கப்படுவர்.
18 வயதிற்கும் 22 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் இளைஞர்கள் என்றும் அழைக்கப்பபடுவர். இதுவே சட்டரீதியான பிரயோகமாக இதன்பிறகு அமைந்திருக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே, சிறுவர்கள் யாரையும் – 18 வயதிற்கு உட்பட்ட ஆண் அல்லது பெண்) குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பமுடியாது என்றும் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படுவர் என்றும் குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறான சட்டரீதியான பிரயோகங்களுக்கு இதன் பிறகு இந்த வரையறை பின்பற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.