குருணாகல் ஜோன் கொதலாவல பாடசாலையில் மாணவர் ஒருவரைத் தண்டித்தமையின் காரணமாக சிறைத் தண்டனை அனுபவிக்கும் ஆசிரியையின் பிணை மனுவை குருணாகல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர நிராகரித்தார்.
கடந்த 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கு மேன்முறையீட்டின் அடிப்படையில் பிணைவழங்குமாறு கோரப்பட்டிருந்தது.
குமுது லலனி ரம்யா த சில்வா என்ற பெயரைக் கொண்ட இவருக்கு கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு வருட கடூளிய சிறைத் தண்டனை மற்றும் 10000 ரூபா தண்டம் விதித்து நீதி மன்றம் தீர்பு வழங்கியிருந்தது.
இத்தீர்ப்புக் குறித்து மேன்முறையீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் ஆசிரியருக்கு பிணை வழங்குமாறு கோரப்பட்டிருந்தது. ஆசிரியையின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவர் சிகிச்சை பெறுவதற்கான தேவையுடன் இருப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டது.
எனினும் அவருக்கு பிணை வழங்க முடியாது என நீதிபதி வழக்கை ஒத்திவைத்ததாக அறிவிக்கப்படுகிறது.